தென்காசி மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு வரவேற்கும் நிகழ்வுகள் உற்சாகமாக கொண்டாடப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில், காவல்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி இனிப்பு வழங்கினர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தனது சக காவல்துறையினருக்கு வாக்கி டாக்கி மூலம் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கவனம் ஈர்த்துள்ளது.