Sunday, December 22

பெண்களின் பாதுகாப்பு மனித சமூகத்தின் பொறுப்பு: விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் மனித சங்கிலி..

பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில், விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக நாடு முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை மத்திய மாவட்ட விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் காந்திபுரம் பஸ் நிலையம் எதிரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

img 20241130 wa00396848273468297857360 | பெண்களின் பாதுகாப்பு மனித சமூகத்தின் பொறுப்பு: விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் மனித சங்கிலி..


இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் I. காமிலா பானு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பைரோஸ், துணைத் தலைவர் சல்மா, பொருளாளர் மெகருன்னிசா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தொகுதி நிர்வாகிகள், வார்டு கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பெண்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளை கண்டித்து குரல் கொடுத்ததுடன், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும், பெண்களின் பாதுகாப்பை பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரம், போஸ்டர் பிரசாரம், தெருமுனை கூட்டங்கள், நாடகங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் இந்த இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க  த. வெ. க. கட்சிக்கொடி விரைவில் அறிமுகம்...

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *