ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியலில் ரூ.83.70 லட்சம் காணிக்கை!

IMG 20241010 WA0020 - ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியலில் ரூ.83.70 லட்சம் காணிக்கை!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் பிரபலமான கோயிலாகும், இங்கு பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் அம்மனை தரிசிக்க வருவது வழக்கமாகும். இவ்வாறு வருபவர்கள் உண்டியலில் தங்களின் காணிக்கைகளை செலுத்துகின்றனர், மற்றும் இந்த காணிக்கைகள் மாதத்திற்கு ஒருமுறை அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்படுகின்றன. இந்நிலையில், கடந்த மாதத்திற்கான உண்டியல் திறப்புப் பணிகள் நேற்று தொடங்கின.

img 20241010 wa00267387692750537956007 - ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியலில் ரூ.83.70 லட்சம் காணிக்கை!
img 20241010 wa00258409388494783683839 - ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியலில் ரூ.83.70 லட்சம் காணிக்கை!
screenshot 20241010 221021 gallery9136902776029333045 - ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியலில் ரூ.83.70 லட்சம் காணிக்கை!

நிரந்தர உண்டியல் திறப்பில் ரூ.60,40,517/- மற்றும் தட்டு காணிக்கையிலிருந்து ரூ.23,24,376/- என மொத்தம் ரூ.83,70,893/- காணிக்கையாக கிடைத்ததாக அதிகாரிகள் நேற்று இரவு 9 மணியளவில் தெரிவித்தனர். மேலும், 178 கிராம் தங்கமும் 304 கிராம் வெள்ளியும் உண்டியலில் இருந்து கிடைத்தது.

இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், அறங்காவலர் குழுத் தலைவர் முரளி கிருஷ்ணன், ஈச்சனாரி விநாயகர் கோவில் உதவி ஆணையர் நாகராஜ், மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர் மஞ்சுளா தேவி, கண்காணிப்பாளர் புவனேஸ்வரி, பொள்ளாச்சி இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் பாக்கியவதி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க  பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுக சார்பில் மரியாதை, நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது….
img 20241010 wa00244764680523427329729 - ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியலில் ரூ.83.70 லட்சம் காணிக்கை!
screenshot 20241010 221028 gallery3906055384262008333 - ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியலில் ரூ.83.70 லட்சம் காணிக்கை!
img 20241010 wa0028186390891776246491 - ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியலில் ரூ.83.70 லட்சம் காணிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *