எம்ஜி மோட்டார் நிறுவனம், வின்ட்சர் இவி காரின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது தனது BAAS (Battery As A Service) திட்டத்தை காமெட் இவி மற்றும் ZS இவி என இரண்டு மாடல்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் பேட்டரியை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தக்கூடிய வசதியுடன் கூடுதலாக விலை குறைப்பு அனுபவிக்கலாம்.
காமெட் இவி: விலை மற்றும் வசதிகள் BAAS திட்டத்தின் கீழ் காமெட் இவி மாடல் 2 லட்சம் ரூபாய் குறைக்கப்பட்டு, தற்போதைய ஆரம்ப விலை ₹4.99 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் பயணிக்கும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ₹2.50 காசுகள் கட்டணம் வசூலிக்கப்படும். பவரான 42 PS மற்றும் 110 Nm டார்க் கொண்ட 17.3 kWh பேட்டரி பேக் மூலம் காமெட் இவி, முழு சார்ஜில் 230 கிமீ தூரம் செல்லக்கூடியது. மாடல் தொடர்பான மற்ற அனைத்து வசதிகளும் மாறாமல் உள்ளன.
ZS இவி: விலை மற்றும் வசதிகள் ZS இவி மாடல், BAAS திட்டத்தின் கீழ் ₹5 லட்சம் குறைவாக, ₹13.99 லட்சத்தில் தொடங்குகிறது. இந்த மாடலில் பயணிக்கும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் அதிகபட்சமாக ₹4.50 காசுகள் கட்டணம் வசூலிக்கப்படும். 50.3 kWh பேட்டரி பேக்குடன், இந்த மாடல் 461 கிமீ வரை செல்லக்கூடியது. இதன் அதிகபட்ச பவர் 176 hp, மேலும் 353 Nm டார்க் கொண்டது.
பை பைக் திட்டம் BAAS திட்டத்தின் ஒரு பகுதியாக, 3 ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது 45,000 கிமீ தாண்டிய பிறகு, எம்ஜி நிறுவனம் 60% பை பைக் திட்டத்தின் கீழ் வாகனத்தை திரும்ப வாங்கிக் கொள்ளும் என உறுதிப்படுத்தியுள்ளது.