Thursday, December 26

அதிரடி…மின் கட்டணம் ரூ 5000 மேல் இருந்தால் ஆன்லைன் மூலம் வசூல்…

தமிழகத்தில் மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சமாக உள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) 2023-24 ஆம் ஆண்டில் மொத்தமாக ரூ.60,505 கோடி மின்சார கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்களை வசூலித்துள்ளது, அதில் 83% ஆன்லைன் வழியாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவுப்படி, ரூ.20 ஆயிரம் வரை உள்ள பரிவர்த்தனைகளை மட்டுமே ரொக்கமாக பெறலாம் என்ற நிலைமையை தொடர்ந்து, தற்போது TANGEDCO ரொக்கமாக செலுத்தக்கூடிய உச்சவரம்பை ரூ.5 ஆயிரமாக குறைத்துள்ளது. இதன்மூலம் மின் கட்டணத்தை 100% டிஜிட்டல் பரிவர்த்தனைகளாக மாற்றவுள்ளது.

மேலும், 820 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்கள், ஆன்லைன் அல்லது காசோலை/டி.டி. மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தும் போது சில வங்கிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன, ஆனால் யுபிஐ, நெட் பேங்கிங், BHIM செயலி மூலம் செலுத்துவது இன்றி எவ்வித கூடுதல் கட்டணமும் கிடையாது.

இதையும் படிக்க  பேங்க் ஆப் இந்தியா: மூன்று ஆண்டுகளில் வணிகம் ரூ. 18 லட்சம் கோடியாக அதிகரிக்கும் - ரஜ்னீஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *