தொழில்நுட்ப துறையில் பணிநீக்கங்களால், 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து இதுவரை சுமார் 1 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். செயல்திறனை மேம்படுத்துதல், மறுசீரமைப்பு திட்டங்கள் மற்றும் செலவுக்குறைக்கான நடவடிக்கைகளால் பல நிறுவனங்கள் தொழில்நுட்ப துறையில் பணிநீக்கம் மேற்கொண்டன. ஒரு அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 41,000 பணியாளர்கள் பல தொழில்நுட்ப நிறுவனங்களால் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.