ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதல்

TATA IPL 2024 Logo 1 - ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதல்

இன்று  (24) நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ‘குவாலிஃபயா் 2’ ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.இதில் வெல்லும் அணி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி, கோப்பைக்காக கொல்கத்தா அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.
முதலில் நடைபெற்ற குவாலிஃபயா் 1 ஆட்டத்தில் ஹைதராபாதை வீழ்த்திய கொல்கத்தா, நேரடியாக இறுபோட்டிக்கு  முன்னேறியது. மறுபுறம், எலிமினேட்டா் ஆட்டத்தில் பெங்களூரை வெளியேற்றிய ராஜஸ்தான், குவாலிஃபயா் 2 ஆட்டத்துக்கு வந்துள்ளது.இரு அணிகளும் நடப்பு சீசனில் ஒரு ஆட்டத்தில் மோதியிருக்க, அதில் ஹைதராபாத் வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக ஐபிஎல் வரலாற்றில் இந்த அணிகள் 19 முறை சந்தித்திருக்க, ஹைதராபாத் 10 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *