புதுக்கோட்டை உழவர் சந்தை பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா!

நாட்டின் 18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு, வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில் அதிமுக சார்பில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கருப்பையா கடந்த திங்கள் கிழமை அன்று வேட்புமனு தாக்கல் செய்து, தொடர்ச்சியாக தொகுதி முழுவதும் உள்ள நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் இன்று காலை அதிமுக வேட்பாளர் கருப்பையா புதுக்கோட்டை உழவர் சந்தை பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டு, அப்பகுதியில் நடைபயிற்சி செய்த பொது மக்கள் மற்றும் உழவர் சந்தை வியாபாரிகளிடம் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

img 20240327 wa00852724742650734293521 - புதுக்கோட்டை உழவர் சந்தை பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா!
img 20240327 wa00832207005927460712016 - புதுக்கோட்டை உழவர் சந்தை பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா!
img 20240327 wa00816950523498893424293 - புதுக்கோட்டை உழவர் சந்தை பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா!
img 20240327 wa00881450110706739558591 - புதுக்கோட்டை உழவர் சந்தை பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா!

img 20240327 wa00913074371507168759399 - புதுக்கோட்டை உழவர் சந்தை பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *