சென்னையில் ரஜினி திரைப்படம் விழா…

IMG 20240308 132408 - சென்னையில் ரஜினி திரைப்படம் விழா...

சென்னையில் ரஜினிகாந்தை கவுரவிக்கும் திரைப்பட விழா நடக்கிறது. ‘ரஜினிசியன்‘ என்ற பெயரில் நடக்கும் இந்த விழாவை பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிறுவனங்கள் நடத்துகின்றன. இந்த விழாவில் காலா, பாபா, 2.ஓ, சிவாஜி, முத்து, தர்பார் படங்கள் திரையிடப்படுகின்றன. சென்னையில் உள்ள சத்யம், எஸ்கேப், பிவிஆர், பிளாசோ, லக்ஸ் ஆகிய தியேட்டர்களில் இந்த படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்த படங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம், கட்டணத்திலும் சலுகை வழங்கப்படுகிறது. முன்னர் வெளிவந்த சூப்பர் ஹிட் படங்களை மீண்டும் திரையிடுவது தற்போது ஒரு டிரண்டாகி உள்ளது. அந்த வரிசையில் ரஜினி படங்களை மொத்தமாக மீண்டும் திரைக்கு கொண்டு வரும் முயற்சி. இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் ரஜினி நடித்த வெள்ளி விழா படங்களான மூன்று முகம், முரட்டுக்காளை, முள்ளும் மலரும் மாதிரியான படங்களையும் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க  சூரிய குடும்ப கிரகங்கள் அணிவகுப்பு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *