96 வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது.
அதில் ஓப்பன்ஹெய்மர் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், நடிகர், துணை நடிகர், இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகிய பிரிவுகளில் 7 ஆஸ்கர் விருதுகளை குவித்துள்ளது.
அதில் கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ படம் 13 பிரிவுகளிலும், புவர் திங்ஸ் படம் 11 பிரிவுகளிலும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
“புவர் திங்ஸ்” திரைப்படமும் 4 ஆஸ்கர் விருதுகளை குவித்தது. அந்த படம் சிறந்த நடிகை, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த தயாரிப்பு, சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்றன.
Leave a Reply