தமிழ் மற்றும் இந்தி படங்களில் கவனம் செலுத்திய ஏ.ஆர்.ரஹ்மான் பெரும்பாலும் பிற மொழிகளில் இசையமைக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் புருஷி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் களமிறங்கியுள்ளார்.
சமீபத்தில் கொச்சிக்கு சென்ற ஏ.ஆர்.ரஹ்மான், மார்ச் 28-ம் தேதி வெளியாகும் ‘ஆடுஜீவிதம்’ படத்துக்காக பிரத்யேக இணையதளத்தை தொடங்கி வைத்தார். பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் கொச்சி மெட்ரோவில் பயணம் செய்தார். அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் மெட்ரோ பயணம் ஆடுஜீவிதம் பிரமோசனின் ஒரு பகுதி என்று கூட செய்திகள் வந்துள்ளன.
Leave a Reply