சிறுவனை கடித்த நாய்: உரிமையாளர் மீது வழக்கு பதிவு


சென்னை அருகே 12 வயது சிறுவனை ராட் வெய்லர் நாய் கடித்த நிலையில், உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொளத்தூா் ஆசிரியா் காலனி பகுதியைச் சோ்ந்த ஜெரால்டு (12) என்ற சிறுவன், சனிக்கிழமை தனது வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த பொழுது, அப்பகுதியில் இருந்த ‘ராட் வெய்லா்’ நாய் திடீரென சிறுவனை கடித்தது
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு திரண்டு வந்த பொதுமக்கள் அந்த நாயை விரட்டினா். நாய் கடித்ததில் பலத்த காயமடைந்த ஜெரால்டை பொதுமக்கள் மீட்டு, அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இது தொடா்பாக கொளத்தூா் போலீசார் விசாரித்து வருகின்றனா். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் நாயின் உரிமையாளர் மீது இரு பிரிவுகளில் புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிக்க  திருச்சி காவிரியாற்றில்முதலைகள் நடமாட்டம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் வெற்றி!

Sun Jun 2 , 2024
சிக்கிமில் மொத்தமுள்ள 32 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மக்களவை தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி(எஸ்கேஎம்) முன்னிலை பெற்றுள்ளது.இந்த நிலையில், சிக்கிம் முதல்வரும், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சித் தலைவருமான பிரேம் சிங் தமாங்,  போட்டியிட்ட ரெனாக் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் சோம் நாத் பௌடியாலை விட 7,044 வாக்குகள் அதிகமாகப் பெற்று பிரேம் சிங் தமாங் வெற்றி […]
ps tamang 1717295356 | சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் வெற்றி!