Thursday, July 17

டெல்லியை வீழ்த்தி உ.பி… ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற லீக் சுற்றில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் உ.பி.வாரியர்ஸ் அணி மோதிக்கொண்டன முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த உ.பி. வாரியர்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது.

139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி, அதிரடியாக ஆட்டத்தை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீராங்கனையான மெக்லானிங் 60 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடினார்.

டெல்லி அணிக்கு, கடைசி ஓவரில், 3 விக்கெட் இருந்த நிலையில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி ஓவரில் முதல் பந்து சிக்ஸருக்கு பறந்தது, டெல்லி அணியே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், திடீர் திருப்பமாக, கிரீஸ் ஹாரிஸின் அபார பந்து வீச்சால், டெல்லி அணி அடுத்தடுத்து 2 விக்கெட்களை பறிகொடுத்தது தோல்வியை தழுவியது. உ.பி.வாரியர்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உ.பி. வாரியர்ஸ் அணி சார்பில் 59 ரன்கள் எடுத்து, 4 விக்கெட்களை கைப்பற்றிய இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிக்க  Kayak competition successfully in Ozona

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *