மக்களவைத் தேர்தலின் ஆறாவது கட்டம் தேர்தல் டெல்லியில் நாளை நடைபெறயுள்ள நிலையில், அனைத்து மதுபானக் கடைகளும் மே 25 அன்று மாலை 6 மணி வரை மூடப்படும். வாக்குப்பதிவு நாளில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களும் மூடப்படும். மருத்துவமனைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல செயல்படும். வாக்காளர்களுக்கு உதவுவதற்காக டெல்லி மெட்ரோ மற்றும் டி. டி. சி பேருந்து சேவைகள் வழக்கத்தை விட சனிக்கிழமை முன்னதாகவே தொடங்கும்.