
மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்டத் தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஒடிசாவில் இன்று பிற்பகல் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாடயுள்ளார்.இந்த நிலையில், நேற்று ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டதையடுத்து, இன்று காலை 11 மணியளவில் மதுராபூரிலும், அதன்பின்னர் ஒடிசாவில் பிற்பகல் 1 மணிக்கு மயூர்பஞ்சிலும், பிற்பகல் 2.30 மணிக்கு பாலசோரிலும், மாலை 4.30-க்கு கேந்த்ராபரிலும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.