உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மக்களவைத் தோ்தலின் இறுதிக்கட்டத் தேர்தலில் கோரக்பூரின் கோரக்நாத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.வாக்களித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசுகையில், 2024 மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தின் திருவிழாவில் இன்று, உத்தரப்பிரதேசத்தின் 13 தொகுதிகள் உட்பட 57 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. “வாக்காளர்கள் மிகுந்த உற்சாகத்தோடு வாக்களித்து வருகின்றனர். வாக்களிக்க வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.நாடு முழுவதும் பாஜகவுக்கு கிடைத்து வரும் ஆதரவைப் பார்க்கும்போது, ஜூன் 4 ஆம் தேதி மீண்டும் மோடி அரசு அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்தார்.