இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வோர் மற்றும் பிற நாடுகளில் இருந்து இந்தியா வருவோரும் ’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்கா, தெற்கு அமெரிக்கா நாடுகளுக்குச் செல்வோரும், அங்கிருந்து இந்தியா வருவோரும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக விமான நிலையங்களிலும் துறைமுகங்களிலும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Leave a Reply