இளங்கலை மருத்தவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நாடு முழுவதும் நடைப்பெற்றது.இந்த நிலையில் டெல்லி,பீகார் போன்ற சில மாநிலங்களில் வினாத்தாள் கசிந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து நீட் தேர்வில் மோசடி செய்தவர்களை டெல்லி மாவட்ட போலீசார் இரண்டு எம்பிபிஎஸ் மாணவர்கள் உட்பட நான்கு பேரை கைது செய்தனர்.பல தேர்வர்களுக்கு பதிலாக வேறொருவர் தேர்வு எழுதியதாக தெரியவந்துள்ளது.இதே போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு பேரையும் பரத்பூர் போலீசார் கைது செய்து தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.