லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் G.O.A.T. படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், விஜய் பாடிய முதல் பாடல் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்றது.சமீபத்தில் படத்துக்கு பிந்தைய பணிகள் தொடங்கியதாக தயாரிப்பாளர் அர்ச்சனா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு அமெரிக்காவில் லோலா VFX நிறுவனத்தில் நடிகர் விஜய் உடனான VFX காட்சிகள் நிறைவடைந்ததாகவும் இதன் இறுதிப் பகுதியை பார்க்க ஆவலாக உள்ளதாகவும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
Leave a Reply