சி.வி. சண்முகம் மீதான விசாரனை ஒத்திவைப்பு

1902929 cvshanmugam - சி.வி. சண்முகம் மீதான விசாரனை ஒத்திவைப்பு

முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் மீதான அவதூறு வழக்குக்கான விசாரணையை  ஜூன் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் நீதிமன்றம்  உத்தரவிட்டதுள்ளது.2022, பிப்ரவரி 28-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகிலும், 2022, ஜூலை 25-ஆம் தேதி பழைய பேருந்து நிலையம் அருகிலும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும் அவதூறாக பேசியதாக, விழுப்புரம்  நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.இதுபோன்ற 2022, செப்டம்பர் 18-ஆம் தேதி திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திலும் அவதூறாக பேசியதாகவும் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதாக அதிமுக வழக்குரைஞர்கள் கூறியதையடுத்து, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூன் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவர் ராதிகா உத்தரவிட்டார்.

இதையும் படிக்க  திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 10 லட்சத்தி 33 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts