
பறவை காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மில்லியன் கணக்கான தடுப்பூசி மருந்துகளை இந்த கோடையில் அமெரிக்கா தயாரிக்கவுள்ளாதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.அதிகரித்து வரும் இந்த தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் வகையில் 4.8 மில்லியன் டோஸ் பறவை காய்ச்சல் தடுப்பூசி மருந்துகளை தயார்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. மார்ச் மாதம் முதல் கால்நடைகளில் பல பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன, மேலும் பால் பண்ணைகளில் பணிபுரிந்த 3 நபர்களுக்கு இந்த தொற்று உறுதி செய்துள்ளது.