சென்னை சென்ட்ரல் மற்றும் விமான நிலையத்துக்கு இடையே இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை இன்று(மே 15) நாள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள படுவதால் சென்னை சென்ட்ரல், தேனாம்பேட்டை வழியாக விமான நிலையத்துக்கு இயக்கப்படும் நேரடி ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்று பச்சை வழித்தடத்தில் மாரி பயணம் மேற்கொள்ளலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.