Monday, January 13

திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து: உயிர் சேதம் இல்லை…

திருப்பூர் மணியக்காரம்பாளையம் பகுதியில் இயங்கும் தனியார் பனியன் நிறுவனத்தில் சனிக்கிழமை காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தீ மளமளவென நிறுவனம் முழுவதும் பரவி எரிய தொடங்கியது. தகவலறிந்ததும், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இரண்டு மணி நேரத்திற்கு மேல் போராடி வருகின்றனர்.


தீ விபத்தின்போது, அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அவசரமாக வெளியேறியதால், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது நல்வாய்ப்பு.


நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த துணி பண்டல்கள் தீப்பிடித்து எரிவதால், வெளியேறிய புகை காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

தீ பற்றிய தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்தில் சென்று தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் திருப்பூர் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க  தமிழக அரசு பள்ளிகளில் இரவு காவலர்கள் விரைவில் நியமனம்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *