சீனா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 60 ஆய்வாளர்கள் இமயமலை பகுதியில், 41,000 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இவை வடமேற்கு திபெத்திய பீடபூமியில் உள்ள குலியா பனிப்பாறையில் இருந்து கண்டறியப்பட்டவை.
அந்த பனிப்பாறையில் ஆய்வு மேற்கொண்டதில், முந்தைய காலங்களில் இருந்து 1,700-க்கும் மேற்பட்ட வைரஸ் மரபணுக்கள் இருப்பது தெரிய வந்தது. பனிப்பாறைகள் கடல் மட்டத்திலிருந்து 6,000 மீட்டர் உயரத்தில் இருப்பதால், பல பழமையான வைரஸ்கள் இங்கு உறைந்து கிடந்துள்ளன. இவை ஒன்பது வெவ்வேறு காலங்களைச் சேர்ந்தவை எனக் கூறப்படுகிறது.
இந்த வைரஸ்களை நினைத்து பயப்பட வேண்டாம் என சீன ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த வைரஸ்கள் மனிதர்கள் அல்லது விலங்குகளை பாதிக்கும் வகையல்ல. இவை பாக்டீரியாக்களை தாக்கும் பாக்டீரியோஃபேஜ்கள் போன்றவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, ரஷ்யாவின் சைபீரிய பனிப்பாறைகளில் கண்டறியப்பட்ட 48,500 ஆண்டுகள் பழமையான வைரஸ்கள் இன்றும் நோய்களை உருவாக்கும் தன்மை கொண்டதாக உள்ளன. இவை இன்றைய வைரஸ்களை விட பெரியதாகவும் ஆபத்தானதாகவும் உள்ளன.
இந்த கண்டுபிடிப்பு பற்றிய முழுமையான ஆய்வு, நேச்சர் ஜியோசைன்ஸ் ஆய்விதழில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது.
Leave a Reply