வால்பாறையில் ஜார்க்கண்ட் மாநில தொழிலாளியை கரடி தாக்கி படுகாயம்…

பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வால்பாறை வனச்சரகத்தின் சிறுகுன்றா தேயிலை தோட்டத்தில் உரம் இடும் பணியில் ஈடுபட்டிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அமீர் ஓராண் மீது கரடி தாக்குதல் நடத்தியது. தேயிலை தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, காடுக்குள் பதுங்கியிருந்த கரடி எதிர்பாராத விதமாக அவரை தாக்கியது. கரடியுடன் போராடிய அமீர் ஓராணின் இடது கை மற்றும் உடலின் பல பகுதிகளில் கடிதமும் குத்தியும் காயம் ஏற்பட்டது. உயிரை காப்பாற்ற அவர் அலறியபோது அருகிலிருந்த தொழிலாளர்கள் கரடியை விரட்டியடித்தனர்.

screenshot 20240922 134722 gallery7568690330416756553 | வால்பாறையில் ஜார்க்கண்ட் மாநில தொழிலாளியை கரடி தாக்கி படுகாயம்...
screenshot 20240922 134514 gallery6568986738690326918 | வால்பாறையில் ஜார்க்கண்ட் மாநில தொழிலாளியை கரடி தாக்கி படுகாயம்...

இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் தகவல் அளித்ததும் வனத்துறையினரும் மருத்துவக் குழுவும் விரைந்து வந்து, அவரை 108 ஆம்புலன்ஸில் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பினர். இந்த சம்பவம் வால்பாறை பகுதிகளில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க  புதுச்சேரி மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவின் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்: மின்கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ராகுல் காந்தி மீது அவதூறு பேச்சு: பாஜக தலைவர்கள் மீது  காங்கிரஸ் புகார்

Sun Sep 22 , 2024
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு பேசிய பாஜக முக்கிய தலைவர்கள் மீது 11 காவல் நிலையங்களில் காங்கிரஸ் உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில் ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் மக்களவை கூட்டத்தில் ஆற்றிய உரை காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு புதிய உத்வேகத்தை அளித்தது. இந்நிலையில், பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் ஹெச். ராஜா ராகுல் காந்தியை தேசவிரோதி எனவும், […]
IMG 20240922 WA0014 | ராகுல் காந்தி மீது அவதூறு பேச்சு: பாஜக தலைவர்கள் மீது  காங்கிரஸ் புகார்