பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வால்பாறை வனச்சரகத்தின் சிறுகுன்றா தேயிலை தோட்டத்தில் உரம் இடும் பணியில் ஈடுபட்டிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அமீர் ஓராண் மீது கரடி தாக்குதல் நடத்தியது. தேயிலை தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, காடுக்குள் பதுங்கியிருந்த கரடி எதிர்பாராத விதமாக அவரை தாக்கியது. கரடியுடன் போராடிய அமீர் ஓராணின் இடது கை மற்றும் உடலின் பல பகுதிகளில் கடிதமும் குத்தியும் காயம் ஏற்பட்டது. உயிரை காப்பாற்ற அவர் அலறியபோது அருகிலிருந்த தொழிலாளர்கள் கரடியை விரட்டியடித்தனர்.
இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் தகவல் அளித்ததும் வனத்துறையினரும் மருத்துவக் குழுவும் விரைந்து வந்து, அவரை 108 ஆம்புலன்ஸில் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பினர். இந்த சம்பவம் வால்பாறை பகுதிகளில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Leave a Reply