இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வில் தமிழகத்தைச் சோ்ந்த 8 மாணவா்கள் உள்பட நாடு முழுவதும் 67 போ் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா்.அனைவரும் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். நீட் தோ்வு வரலாற்றிலேயே தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்கள் இத்தகைய சிறப்பிடங்களைப் பெறுவது இதுவே முதல்முறையாகும்.இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு நீட் தோ்வு எழுதிய 1.52 லட்சம் தமிழக மாணவா்களில், 89,426 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 11,000 பேருக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.