திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை எரித்து அதிமுகவினர் போராட்டம்..

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அதிமுகவினர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை எரித்து, காலணியால் அடித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது, அண்ணாமலை வெளியிட்ட கருத்துகளுக்கு எதிராக அதிமுகவினர் பதிவு செய்த கடும் எதிர்ப்பாகும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டிய அதிமுகவினர், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.img 20240827 wa00167322355548016088671 | திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை எரித்து அதிமுகவினர் போராட்டம்..img 20240827 wa00171146552283341818134 | திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை எரித்து அதிமுகவினர் போராட்டம்..

அதிமுக-பாஜக இடையிலான கூட்டணி முறிவுக்கு அண்ணாமலை தான் காரணம் என்றும், அவர் தரக்குறைவாக பேசுவதால் கூட்டணி முறிந்துவிட்டதாக அதிமுகவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த போராட்டத்தில் முன்னாள் எம்பி ரத்தினவேல், மகளிரணி மாவட்ட செயலாளர் நசீமா பாரிக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு அண்ணாமலையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இந்த திடீர் போராட்டத்தால் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது, எனினும் அங்கு உடனடியாக போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவை சாலையோர சிறு வியாபாரிகள் கூட்டமைப்பின் சார்பில் மனு அளிப்பு..

Tue Aug 27 , 2024
கோவை மாவட்டம் மற்றும் அனைத்து சாலையோர சிறு வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் நஞ்சப்பா ரோடு சாலையோர வியாபாரிகள் மனு அளித்தனர். சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட வியாபாரிகள், தங்களின் கடைகள் செயல்படாததால் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் கடைகளை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இந்த மனுவை மாவட்டத் தலைவர் மணி, […]
IMG 20240827 WA0019 | கோவை சாலையோர சிறு வியாபாரிகள் கூட்டமைப்பின் சார்பில் மனு அளிப்பு..