
பொள்ளாச்சி அருகே உள்ள கருமாண்டக் கவுண்டனூர் பகுதியில், சுயம்புவாக உருவான மணியாச்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இப்பகுதி பொதுமக்கள் எப்போதும் அம்மனை வழிபட்டு, தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறுவதை கண்டுள்ளனர். இதனால், அதிகமான பக்தர்கள் வந்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.


மணியாச்சி அம்மனுக்கு கோவில் எழுப்பி கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஊர்பொதுமக்கள் முடிவெடுத்தனர், பின்னர் அந்தத் திட்டத்திற்கு ஏற்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் முழுமையாக முடிந்ததும், கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இன்று காலை மணியாச்சி அம்மன் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
இதேபோல், கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் மற்றும் முருகன் கோபுர கலசங்களுக்கும் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, புனித நீர் தெளிக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

