திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில், கோவை தெற்கு மாவட்டம் பாழ்ந்த பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ஆர்ச்-இலிருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டு, பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் கழக உயர்நிலை செயல் குழு உறுப்பினர் மு.கண்ணப்பன் ஆகியோர் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்த இந்நிகழ்வில், தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் தேவ சேனாதிபதி, யுவராஜ் மருதவேல், டாக்டர் செந்தில்குமார், ஹிமாலயா யுவராஜ், ரமேஷ், ராசு, துரை, செந்தில்குமார், அன்பரசு, மன்னவன் முத்துமாணிக்கம், மகாலிங்கம், மாநில நிர்வாகிகள் தென்றல் செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏ பணப்பட்டி தினகரன், திப்பம்பட்டி ஆறுச்சாமி, மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன், பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் பல திமுக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.