![இருங்களூர் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் போராட்டம் இருங்களூர் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் போராட்டம்](https://thenewsoutlook.com/wp-content/uploads/2025/01/IMG-20250129-WA0085-1024x574.jpg)
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள இருங்களூர் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதை எதிர்த்து 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![இருங்களூர் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் போராட்டம் இருங்களூர் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் போராட்டம்](https://thenewsoutlook.com/wp-content/uploads/2025/01/img-20250129-wa00848306120986171901183-1024x574.jpg)
போராட்டம் குறித்து தகவலறிந்த போலீசார், பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர், ஆனால் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். அதனைத் தொடர்ந்து, மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு, மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்து, நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தினார்.
இதன்பிறகு, பொதுமக்கள் போராட்டத்தை முடித்து இடத்தை விட்டு செல்வதுடன், அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
![இருங்களூர் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் போராட்டம் இருங்களூர் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் போராட்டம்](https://thenewsoutlook.com/wp-content/uploads/2025/01/img-20250129-wa00865769898441358959696-1024x574.jpg)
![இருங்களூர் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் போராட்டம் இருங்களூர் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் போராட்டம்](file:///data/user/0/org.wordpress.android/cache/img-20250129-wa00833271826145559499528.jpg)