எம்ஜிஆரின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியின் கீழ் உள்ள வெள்ளலூர் பேருந்து திடலில் முன்னாள் முதலமைச்சர் மற்றும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ தாமோதரன் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனுடன், கிணத்துக்கடவு முன்னாள் எம்எல்ஏ எட்டிமடை சண்முகம் மற்றும் வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மருதாச்சலம் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி இதில் பங்கேற்றனர். பிறகு, பொதுமக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, அங்குள்ள காமராஜர் கல்யாண மண்டபத்தில் கண் மருத்துவ முகாம் மற்றும் ஈசிஜி மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன, இதில் பலர் கலந்து கொண்டு மருத்துவ சேவைகள் பெற்றனர்.

இவையடுத்து, வெள்ளலூர் 11வது வார்டு கிளை அதிமுக அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ எட்டிமடை சண்முகம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ தாமோதரன் மற்றும் வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மருதாச்சலம் இந்த அலுவலகத்தை திறந்து வைத்து கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்த விழாவில், வெள்ளலூர் பேரூராட்சி துணைத் தலைவர் கே கணேசன், வார்டு கவுன்சிலர்களான தமிழரசி, கார்த்திகேயன், கருணாகரன், சந்திரன், உமா மகேஸ்வரி, பார்வதி, கூட்டுறவு சங்க தலைவர் கண்ணையன், ஒன்றிய பொருளாளர் அக்ரி கோபால், 15வது வார்டு செயலாளர் மற்றும் 11வது வார்டு செயலாளர் ராஜன், துணை செயலாளர் காளிமுத்து, பொருளாளர் உதயகுமார் மற்றும் கழக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *