Wednesday, February 5

திருச்சி உறையூரில் 6ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா

திருச்சி உறையூரின் ராமலிங்க நகர் நெசவாளர் காலனியில் 6ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் அப்பகுதி மக்கள் பாரம்பரிய உடை அணிந்து, கரும்பு தோரணம் கட்டி, மண் பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். திமுக தில்லைநகர் பகுதி செயலாளர் மற்றும் கவுன்சிலர் கொடாப்பு நாகராஜ், பொதுமக்களுடன் இணைந்து விழாவில் பங்கேற்று பொங்கல் வைத்தார். மேலும், விழாவின்போது பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சமத்துவ பொங்கல் விழாவின் ஏற்பாடுகளை திமுக கலை இலக்கியப் பிரிவு மாநகர துணை அமைப்பாளர் கமல், சந்திரசேகர் மற்றும் RNR பிரதர்ஸ் உட்பட விழாக் கமிட்டி செய்திருந்தனர்.

திருச்சி உறையூரில் 6ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா

திருச்சி உறையூரில் 6ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா

திருச்சி உறையூரில் 6ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா

இதையும் படிக்க  "இனிகோ இருதயராஜ் கூறிய ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு: வணிகர் சங்கங்கள்"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *