கோவை, துடியலூர் அருகே உள்ள கங்கா செவிலியர் கல்லூரியில் “சேவை ஒரு தொழிலாக” என்ற தலைப்பில் மாணவ மாணவிகளுடன் உரையாற்றிய இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, விண்வெளியில் இந்திய விவசாய பயிர்கள் விளைவிக்க முடியும் எனக் கூறினார். மேலும், தமிழகம் மற்றும் அரசுடன் இணைந்து 2000 பள்ளிகளில் “விவசாயம் முதல் விண்வெளி வரை” என்ற ஆராய்ச்சி கூடங்களை உருவாக்க ரூபாய் 500 கோடிகளை ஒதுக்கி விரைவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என அவர் அறிவித்தார்.
பேட்டியின் போது, இந்தியா சந்திராயன்-1 மூலம் நிலவில் நீர்மூலக்கூறுகள் இருப்பதை கண்டறிந்ததுடன், மகாபலிபுரத்திலிருந்து ஏவப்பட்ட 140க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களுடன் சென்ற ராக்கெட் மூலம் இந்தியா மீண்டும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றார். மேலும், விண்வெளி ஆராய்ச்சிகள் மருத்துவத் துறைக்கு பயனுள்ளதாக, டெலி சர்ஜரி மற்றும் சர்ஜிக்கல் ரோபோக்களை உருவாக்குவதற்கு உதவியுள்ளது என அவர் தெரிவித்தார்.
விண்வெளியில் 2 செயற்கைக்கோள்களை இணைப்பது இந்தியாவின் சாதனை என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவுக்கு எதிர்காலத்தில் மனிதர்களை விண்ணிற்கு அனுப்புதல், விண்வெளி மையம் அமைத்தல், மற்றும் விண்வெளியில் உள்ள குப்பைகளை அகற்றுதல் போன்ற பணி முக்கியமாக இருக்கும் என்றும் கூறினார்.
இஸ்ரோ-வின் முன்னேற்றங்களுக்கான தென்னிந்தியர்களின் முக்கிய பங்கு குறித்து அவர் பேசினார். அவரே மேலும், “கூகுல் மேப் போன்று இந்தியாவிற்கு தனி புவன் கலன் உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.