திருச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைமை சார்பில் மாணவ, மாணவிகளுக்கான மாபெரும் மார்க்க திறனாய்வு போட்டி பீமநகர் தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பீமநகர் ரபிக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாணவர்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற 17 பேருக்கு முதன்மை பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஹக்கீம் அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.