Wednesday, February 5

தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கம்: தனி நல வாரியம் அமைக்க கோரிக்கை

திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் மற்றும் சிறந்த மேடை அலங்கரிப்பாளர்களுக்கான போட்டி மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாநிலத் தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் மணிவண்ணன், மாநில பொதுச் செயலாளர் மணிகண்டன், திருச்சி மாவட்ட தலைவர் சந்திரசேகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கம்: தனி நல வாரியம் அமைக்க கோரிக்கை<br>

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 25 லட்சத்திற்கும் மேற்பட்ட அலங்கரிப்பாளர் குடும்பங்களுக்கான தனி நல வாரியத்தை அமைக்க மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், அலங்கரிப்பு தொடர்பான கலைத்துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் எதிர்கால வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

விச்வகர்மா யோஜனா திட்டத்தில் மாலை கட்டும் தொழிலாளர்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், திருமண அலங்கரிப்பாளர்களும் இதில் சேர்க்கப்பட வேண்டும் எனவும், கலைஞர் கைவினை திட்டத்தில் திருமண அலங்கரிப்பு தொழிலாளர்களுக்கான தனி பிரிவை உருவாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையும் படிக்க  புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய போராட்டம்
தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கம்: தனி நல வாரியம் அமைக்க கோரிக்கை<br>

இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, சிறந்த மேடை அலங்கரிப்பாளர்களுக்கான போட்டியில் முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசாக 50,000 ரூபாய், மற்றும் மூன்றாம் பரிசாக 25,000 ரூபாய் வழங்கப்பட்டது. இதில் மாநில செயலாளர் சிவக்குமார், பொருளாளர் சின்னப்பன், மற்றும் திருச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *