ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சமீபத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து, 17 ஆம் நாள் மண்டல பூஜை நிகழ்வில் பாரதி வள்ளி ஒயில் கும்மி குழுவின் கும்மி ஆட்டம் சிறப்பாக அரங்கேற்றம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் ஆனைமலை பேரூராட்சி தலைவர் திருமதி கலைச்செல்வி சாந்தலிங்க குமார், கோவில் அறங்காவலர் குழுவினர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் பக்த கோடிகள் கலந்து கொண்டு கும்மி ஆட்டத்தை உற்சாகமாக ரசித்தனர்.
பாரதி வள்ளி குழுவின் அரங்கேற்றம் பாரம்பரிய கலைக்கு புதிய உயிரூட்டல் வழங்கியது. பக்தர்களும் பொதுமக்களும் இந்த நிகழ்ச்சியை பாராட்டி மகிழ்ச்சியடைந்தனர்.
இதுபோன்ற பாரம்பரிய நிகழ்வுகள் தமிழர் கலாச்சாரத்தை முன்னேற்றுவதோடு மட்டுமல்லாமல், இளைஞர்கள் மத்தியில் பாரம்பரிய கலைக்கான ஆர்வத்தையும் உருவாக்குகின்றன.