கோவை விழாவின் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் 2 நாட்கள் “கொங்கு உணவு திருவிழா மற்றும் கண்காட்சி” நடைபெறுகிறது.
இதில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு 400-க்கும் மேற்பட்ட சைவ, அசைவ உணவுகள், இனிப்புகள், பழச்சாறுகள் என ஏராளமான உணவுகள் பரிமாறப்பட்டன.
இவ்விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் 800 ரூபாய் கொடுத்து டோக்கன் பெற்று கோவில் அன்னதானதில் கூட்டம் கூட்டமாக நின்று உணவு வாங்க வெகு நேரம் நின்று உணவு வாங்க வேண்டிய இருந்தது’
மேலும் வரிசையில் நின்று உணவு வாங்க முடியாமல் பரிதவித்தனர் சிலர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர் மேலும் சில பொதுமக்கள் உணவின் தரம் சரியில்லை என சிலர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.