புதுச்சேரியில் மனைவியை கொன்ற கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

புதுச்சேரியில் மனைவி தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்த கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு.

புதுச்சேரி முத்திரையர்பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பாபு (55). பால் வியாபாரி. இவரது மனைவி ரதிகலா (45) தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் அனைவரிடமும் சகஜமாக பேசி பழகுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் பாபு மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 26.5.2021 அன்று கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது இதில் பாபு மனைவியின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்தார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாபுவை கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை கடந்த மூன்று வருடங்களாக புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்படடது. அதில் பாபுவிற்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சந்திரசேகர் தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொள்ளாச்சி அருகே அடிப்படை வசதியின்மை: ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை...

Wed Aug 28 , 2024
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சக்திநகர், பொன்நகர், சாய்நகர், காஸ்மோ வில்லேஜ் பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 18 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளை இழந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதிகளில் தெருவிளக்கு, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டிய பொதுமக்கள், இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மக்கள் அடிக்கடி முறையிட்டு […]
IMG 20240828 WA0030 | பொள்ளாச்சி அருகே அடிப்படை வசதியின்மை: ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை...