கோவையில் ஜிம்மில் அசத்தப்போகும் முதியோர் முதல் பிரத்யேக மையம் தொடக்கம்!

கோவையில் முதன்முறையாக பிலாட்டீஸ் உடல் நல மையம் தொடங்கப்பட்டுள்ளது முதியவர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவில் வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் கணக்கீடு செய்துள்ளது.

இதனிடையே இந்தியாவில் முதியோர் நலன் சார்ந்த அமைப்புகள், பயிற்சி மையங்கள் மற்றும் அரசு திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கோவையில் முதன் முறையாக முதியோரின் உடல் நலனை மேம்படுத்தும் வகையில், ஒன் பாப் பிலாட்டீஸ் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் 8 வயது முதல், எந்த வயதுடையவருக்கும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இம்மையத்தை 87 வயது முதியவர் குருசாமி தொடங்கி வைத்தார்.


இதுகுறித்து ஒன் பாப் நிறுவனர் சஞ்சனா மகேஷ் கூறுகையில், “இந்தியாவில் தற்போது நடைபயிற்சி மட்டுமே முதியவர்களுக்கான உடற்பயிற்சி என்ற நிலை மாறி, பிலாட்டீஸ் பயிற்சியை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். தொழில்நகரான கோவையில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

முதியோர் மட்டுமல்லாது, குழந்தைகள், கர்ப்பிணிகளும் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். பொது மருத்துவர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் வழிகாட்டுதலின் படி, பிலாட்டீஸ் உடற்பயிற்சி மற்றும் ஆலோசனையை ஜெயாமகேஷ் மற்றும் அனுஷ் ஆகியோர் வழங்க உள்ளனர்.

இங்கு, முதுகெலும்பை வலுப்படுத்துதல், கை, கால் மூட்டு வலியைக் குறைக்கும் பயிற்சிகள் மற்றும் தசைகளை இறுக்கமாக்கி, உடலை வலுப்படுத்தும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த மையம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட உள்ளது. திறப்பு விழா சலுகையாக வரும் 10ம் தேதி வரை கட்டணத்தில் 25% தள்ளுபடி வழங்கப்படும்” இவ்வாறு சஞ்சனா மகேஷ் கூறினார்.

இதுகுறித்து ஆலோசகர் ஜெயாமகேஷ் கூறுகையில், “முதியோர் நலன் சார்ந்த இத்தகைய பயிற்சி மையங்கள் மேலை நாடுகளில் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் இம்மையங்கள் தற்போது தொடங்கப்பட்டு வரும்  நிலையில், கோவையில் இறக்குமதி செய்யப்பட்ட பிரத்தியேக இயந்திரங்களுடன் ஒன் பாப் மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதோடும், நாங்கள் அளிக்கும் பயிற்சிக்கு பி.எஸ்.எஸ் அனுமதி வாங்கியுள்ளது.” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *