Sunday, December 22

Tag: #helpdesk #tamilnadu #thenewsoutlook

தமிழ்நாட்டின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் உதவி மையம் அமைக்க உயர்கல்வி துறை நடவடிக்கை

தமிழ்நாட்டின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் உதவி மையம் அமைக்க உயர்கல்வி துறை நடவடிக்கை

தமிழ்நாடு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆலோசனையின் அடிப்படையில், உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உதவி மையங்கள் (Help Desk) அமைக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.அதன் அடிப்படையில், உயர்கல்வி துறையின் கீழ் செயல்படும் 13 பல்கலைக்கழகங்கள், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள், 10 பொறியியல் கல்லூரிகள், 52 தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த உதவி மையங்கள் உருவாக்கப்படுகின்றன.இந்த உதவி மையங்கள், மாணவ-மாணவியர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு பட்டப் படிப்புகள், பட்டமேற்படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், மாணவர் சேர்க்கை போன்ற விவரங்களை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள உதவுகின்றன. மே...