தவளக்குப்பம் இராஜீவ் காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதுச்சேரி அரசு உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப இயக்குனரகம் ஆணைக்கிடை கீழ், தேசிய உயர்கல்வி திட்ட நிதியில் (RUSA) ₹66.99 லட்சம் மதிப்பில் 314.29 சதுர அடியில் கட்டப்பட்ட புதிய கணினி ஆய்வகக் கட்டிடத் திறப்பு விழா இன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
இந்த விழாவில் புதுச்சேரி மணவெளித் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவருமான திரு. செல்வம் ஆர் மற்றும் புதுச்சேரி அரசு உள்துறை மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. ஆ. நமச்சிவாயம் அவர்கள் கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி ஆய்வகத்தை திறந்து வைத்தனர்.
விழாவில் புதுச்சேரி அரசு உயர்கல்வி துறை இயக்குநர் திரு. அமன் ஷர்மா மற்றும் தேசிய உயர்கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. K. அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கல்லூரியின் முதல்வர் முனைவர் ஹென்னா மோனிஷா, கல்வித்துறை இணை இயக்குனர் திருமதி சிவகாமி, பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிட கோட்டம்-2 உதவி பொறியாளர் திருமதி விக்டோரியா, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் V. உமா, கணிப்பொறி துறைத் தலைவர் முனைவர் N. ஞானாம்பிகை, துறைத் தலைவர்கள், உதவிப் பேராசிரியர்கள், மற்றும் அப்பகுதியின் முக்கிய பிரமுகர்கள், கலந்துகொண்டனர்.
இதன் பிறகு, மாவட்ட துணை தலைவர் மனிகண்டன், ராஜகுரு, ஜெயக்குமார், பழனி, தங்கம் பெருமாள், மணி நாகமுத்து, சகாயராஜ் மற்றும் அலுவலக ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் என பலரும் விழாவில் கலந்துக்கொண்டனர்.