பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாநகர மாவட்ட தலைவராக ரமேஷ் குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களில் கட்சியின் கிளை, மண்டல் தலைவர்களுடன், 63 மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று கோவை மாநகர தலைவராக ரமேஷ் குமாரின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பாரதியார் ஜனதா கட்சியின் தேர்தல் அதிகாரி கோபால்சாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார். அறிவிப்பு வெளியான பின்னர், கட்சி தொண்டர்கள் “பாரத் மாதா கி ஜே” என்ற கோஷம் எழுப்பி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதன்பின்னர், மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஜி.கே. செல்வகுமார், கர்ணல் பாண்டியன், நீலகிரி பாராளுமன்ற பொறுப்பாளி நந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் ரமேஷ் குமார் உறுதி மொழி எடுத்தார். அதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.