Wednesday, February 5

“நியாய விலை கடை ஊழியர்களின் கோரிக்கைகளை அமைச்சர் திருமுருகனிடம் மசோதா”

பாரதிய நியாய விலை கடை ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில், மாண்புமிகு குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. திருமுருகன் அவர்களை சந்தித்து, புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் இலவச அரிசி திட்டத்தை நடைமுறைப்படுத்தியதற்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த ஆகஸ்ட் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், நியாய விலை கடை ஊழியர்களின் நிலுவை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதன் அடிப்படையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிலுவை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, 2025 மார்ச் மாத பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் கட்டமாக 56 மாத நிலுவை ஊதியத்தில் 7 மாத நிலுவை ஊதியத்தை வழங்குவதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது.

அத்தோடு, ரூபாய் 4000 தில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களை உடனடியாக பணி நிரந்தரமாகப் பாதுகாக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக உயர்த்தப்படாமல் உள்ள கையாளுதல் கட்டணம் மற்றும் ஆண்டு மானியம் ஆகியவற்றை மறு ஆய்வு செய்து, இரு மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

ரேஷன் கடை ஊழியர்களை மத்திய மற்றும் மாநில அரசின் பொது விநியோகத் திட்டங்களை செயல்படுத்தும் சேவை ஊழியர்களாக கருதி, குடிமை பொருள் வழங்கல் துறையின் மூலம், வரும் காலங்களில் மாதம் முதல் வாரத்தில் முறையாக சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டது.

இந்த கோரிக்கைகள் குறித்து, அமைச்சர் அவர்கள் தமது துறையின் மூலம், கேரளாவில் வழங்கப்படும் கையாளுதல் கட்டணத்தை போல, உயர் கட்டணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மற்ற கோரிக்கைகளை மாண்புமிகு முதல்வரிடம் ஆலோசித்து, தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதையும் படிக்க  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *