புதுச்சேரி: மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை நாட்டின் மக்களுடன் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் வானொலி வழியாக உரையாற்றுவது அனைவரும் அறிந்ததே. அதன்படி, 2024 ஆம் ஆண்டின் இறுதி ஞாயிறான இன்று (29.12.2024), பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் உரையை பொதுமக்கள் திரளாக கேட்கும் வகையில், மாண்புமிகு புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் திரு செல்வம் ஆர் அவர்கள் தவளக்குப்பத்தில் உள்ள தனது இல்லத்தில் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இந்த நிகழ்வில், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் திரு செல்வம் ஆர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் சேர்ந்து மனதின் குரல் நிகழ்ச்சியை ஆர்வத்துடன் கேட்டார்.
இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில விவசாய அணி தலைவர் ராமு, மாவட்ட தலைவர் சுகுமார், தொகுதி பொறுப்பாளர் லட்சுமிகாந்தன், மாவட்ட துணைத் தலைவர் மணிகண்டன், சக்திவேல், காமராஜ், கலைவாணன், மாவட்ட மகளிர் அணி சுமதி, தங்கதுரை, ஞானசேகர், எஸ்.வி.எஸ். குமரன், சசி, பழனி, நாகமுத்து, ராஜதுரை, வாழுமுனி, ஜீவன்மூர்த்தி, தர்மன், வீரபாலன், சித்ரா, உஷா, வேலாயுதம், துரைசாமி, அருள்ராஜ், முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பிரதமர் உரையை கேட்டனர்.
இந்த நிகழ்வில் பொதுமக்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டு, மனதின் குரல் நிகழ்ச்சியை நேரடியாகக் கேட்டு மகிழ்ந்தனர். மாண்புமிகு பிரதமரின் உரை, அனைவரின் மனத்தையும் உற்சாகமூட்டியது.