Wednesday, February 5

ஆதிவாசி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார்….

மருதமலை அடிவாரத்தில் ஆதிவாசல் குடியிருப்பு 50க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் உள்ளன இவர்களின் கோரிக்கையான கழிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

ஆதிவாசி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார்....
ஆதிவாசி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார்....
ஆதிவாசி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார்....



இதனைத் தொடர்ந்து கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது இதில் கோவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக கணபதி ராஜ்குமார் தேர்தலில் போட்டியிட்டார் அப்போது மருதமலை அடிவாரத்தில் இருக்கும் ஆதிவாசிகளிடம் ஒட்டு கேட்டு பிரச்சாரம் செய்யும் போது மக்கள் எங்களுக்கு நீண்ட கால கோரிக்கையான கழிப்பறை வசதிகளை கட்டித்தருமாறு கேட்டுக் கொண்டனர் மற்றும் மருதமலை அறங்காவலர் குழு சார்பிலும் இவர்களின் கோரிக்கையை முன் வைத்தனர் ..

இதனை தொடர்ந்து கணபதி ராஜ்குமார் கோவை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் கோவை மாநகராட்சி நிதியில் ஆதிவாசி குடியிருப்புக்கு கழிப்பறை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து கடந்த மாத கழிப்பறை கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது இதனால் இன்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி மற்றும் மருதமலை அறங்காவலர் குழு சார்பில் மகேஷ் அவர்களும் இன்று கழிப்பறை கட்டும் பணியை ஆய்வு செய்தனர் இதனால் மருதமலை அடிவாரத்தில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்


மேலும் நம்மிடம் மருதமலை அறங்காவலர் மகேஷ் கூறுகையில் இந்த ஆதிவாசி மக்கள் மருதமலையின் காவலராக இருக்கின்றனர் இங்கு எது நடந்தாலும் அவர்கள் தான் முதலில் எங்களுக்கு தகவல் கொடுக்கின்றனர் இதனால் இவர்களுடைய பங்கு மிகவும் முக்கியமானதாகும்

மேலும் இவர்களுக்கு  கழிப்பறை வசதிகள் அமைத்துக் கொடுத்தால் இவர்கள் இரவு நேரங்களில் வனவிலங்குகளில் இருந்து இந்த மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என மகேஷ் கூறினார்..

இதையும் படிக்க  இந்திய கூட்டணி பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *