Thursday, December 26

தமிழ்நாட்டின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் உதவி மையம் அமைக்க உயர்கல்வி துறை நடவடிக்கை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆலோசனையின் அடிப்படையில், உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உதவி மையங்கள் (Help Desk) அமைக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், உயர்கல்வி துறையின் கீழ் செயல்படும் 13 பல்கலைக்கழகங்கள், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள், 10 பொறியியல் கல்லூரிகள், 52 தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த உதவி மையங்கள் உருவாக்கப்படுகின்றன.

இந்த உதவி மையங்கள், மாணவ-மாணவியர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு பட்டப் படிப்புகள், பட்டமேற்படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், மாணவர் சேர்க்கை போன்ற விவரங்களை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள உதவுகின்றன. மேலும், துறை அலுவலக அமைவிடம், அலுவலக நடைமுறைகள், தனியார் கோரிக்கைகள் தொடர்பான முன்னேற்ற நிலை ஆகிய விவரங்களையும் இம்மையங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இத்தகவலை வழங்கும் உதவி மையங்கள், பயனாளிகளுக்கு எளிமையாகப் பயன்படுத்தக்கூடிய (user-friendly) முறையில் வடிவமைக்கப்படும் என்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க  வால்பாறையில் ஜார்க்கண்ட் மாநில தொழிலாளியை கரடி தாக்கி படுகாயம்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *