“ஏரியில்கூட தாமரை மலரக் கூடாது” என கிண்டல் – அமைச்சர் சேகர்பாபு…

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பில் உருவாக்கப்படும் ஈரநிலை பசுமை பூங்கா, ஏராளமான வசதிகளுடன் அடங்கியதாகும். இதில் 103 இருக்கைகள், செங்கல் நடைபாதை, கருங்கல் நடைபாதை, கூடைப்பந்து விளையாட்டுத் திடல், சிறுவர் விளையாட்டுத் திடல், 6.85 ஏக்கர் பரப்பளவில் ஏரி, உடற்பயிற்சி திடல், வாகன நிறுத்தம், கழிப்பிடம், கடைகள், மின்விளக்கு, சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு இன்று காலையில் பூங்கா பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

அந்த நேரத்தில் பூங்கா பணிகளின் நடத்தை, நிறைவு தேதி போன்ற விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர், கூடுதலாக மின்விளக்கு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த பரிந்துரைகள் வழங்கினார். அத்துடன் குளத்தில் மலர்ந்திருந்த தாமரை மலர்களை அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். “ஏரியில்கூட தாமரை மலரக் கூடாது” என கிண்டலாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆய்வின் போது காரம்பாக்கம் எம்எல்ஏ க.கணபதி மற்றும் அரசுத் துறையின் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

இதையும் படிக்க  தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு எங்கே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வீட்டுமனை வழங்க கோரிக்கை மனு : கோவையில் முதல்வரிடம் வழங்கிய பத்திரிகையாளர்கள் !!!

Wed Nov 6 , 2024
கோவை,  பத்திரிகையாளர்களுக்கு  2 – ம் கட்டமாக சலுகை விலையில் வீட்டு மனை வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோயம்புத்தூர் அனைத்து பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக மனு அளிக்கப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வந்து இருந்தார். கோவையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்த முதல்வரை பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் சந்தித்து தங்களது கோரிக்கைகளை மனுக்களாக தந்து […]
IMG WA jpg

You May Like