செhttp://www.nmdc.co.inன்னை: தேசிய கனிம மேம்பாட்டு நிறுவனம் (என்எம்டிசி) தன்னுடைய பல்வேறு துறைகளில் 153 காலியிடங்களை நிரப்பும் நோக்கில் ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கமர்ஷியல், சுற்றுச்சூழல், ஜியோ மற்றும் க்யூசி, சுரங்கம், சர்வே, கெமிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், ஐஇ மற்றும் மெக்கானிக்கல் போன்ற துறைகளில் காலியிடங்கள் உள்ளன.
விண்ணப்ப விவரங்கள்:
கடைசி தேதி: 10 நவம்பர் 2024
அனுப்ப வேண்டிய இடம்: nmdc.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம்
காலியிடங்கள்:
கமர்ஷியல் – 4
ஜியோ மற்றும் க்யூசி – 3
சுற்றுச்சூழல் – 1
சுரங்கம் – 56
சர்வே – 9
கெமிக்கல் – 4
எலக்ட்ரிக்கல் – 44
சிவில் – 9
ஐஇ – 3
மெக்கானிக்கல் – 20
தகுதி: இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள், பொறியியல் டிப்ளமோ, சிஏ/ஐசிஎம்ஏ, அல்லது பட்டம்/ எம்பிஏ/ பிஜி ஆகிய துறைகளில் கல்வி முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.250. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் என்எம்டிசி ஊழியர்களுக்கு கட்டணம் இல்லை.
தேர்வு முறைகள்: கணினி அடிப்படையிலான தேர்வு (CBT), திறன்சோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்:
முதல் 12 மாதங்கள் – மாதம் ரூ.37,000
அடுத்த 6 மாதங்கள் – மாதம் ரூ.38,000
பயிற்சிக் காலம் முடிந்ததும், ரூ.37,000 முதல் ரூ.1,30,000 வரை
இந்த வேலைவாய்ப்பு தொடர்பான மேலதிக விவரங்களுக்கு www.nmdc.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.