கோவை மாவட்டம் உடையாம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில், ஓரியன் இன்னோவேஷன் நிறுவனம் ஸ்மார்ட் கம்ப்யூட்டர் ஆய்வகத்தை துவங்கியுள்ளது.
இந்த திட்டம் “Ol Empower” என்ற CSR முன்னெடுப்பின் கீழ் அமைகிறது. டிஜிட்டல் உலகில் மாணவர்கள் திறம்பட செயல்பட உதவும் திறன்களை உருவாக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், வசதியற்ற மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வியினை வழங்கும் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.
கணினி ஆய்வக தொடக்கவிழாவில், ஓரியன் இன்னோவேஷன் மனிதவள துறை தலைவர் அருண் பால் கூறுகையில், “சமுதாய முன்னேற்றத்திற்கு தொழில்நுட்பக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தொழில்நுட்பத்தை அனைவருக்கும் கொண்டு சேர்க்க ஓரியன் இன்னோவேஷன் நிறுவனமாக நாங்கள் அர்ப்பணித்துள்ளோம்,” என்றார்.
இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் ரமேஷ் பாபு கூறுகையில், “இளைய தலைமுறையின் வளர்ச்சிக்காக STEM பாடங்கள் மற்றும் வாழ்க்கை திறன்கள் கற்பிக்க தன்னார்வப் பணியாளர்கள் வார இறுதிகளில் பயிற்சி அளிப்பார்கள். இது மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு ஆதாரமாக அமையும்,” என்றார்.
அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரம் மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் இத்திட்டம், சாதனையற்ற சமூகத்தில் புதுமையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் அனைவரும் நம்பிக்கை தெரிவித்தனர்.